பாரிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும் உலகின் 2-ம் நிலை வீரருமான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 8-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரென்ஸோ முசெட்டியுடன் மோதினார்.
இதில் அல்கராஸ் முதல் செட்டை 4-6 என இழந்தார். 2-வது செட்டிலும் முசெட்டி கடுமையான சவால் அளித்தார். டைபிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை அல்கராஸ் 7-6 (7-3) என தன்வசப்படுத்தினார். தொடர்ந்து 3-வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய அல்கராஸ் 6-0 என கைப்பற்றினார். 4-வது செட்டில் அல்கராஸ் 2-0 என முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக லாரென்ஸோ முசெட்டி போட்டியில் இருந்து விலகினார். இதனால் அல்கராஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.