செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில்விளையாட்டு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை

சென்னை

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரிகளில், விளையாட்டு பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

அதன்படி, 2025 – 26 கல்வியாண்டிற்கான பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு பிரிவில் மாணவ – மாணவியரை சேர்ப்பதற்கான தேர்வு போட்டிகள், அக்கல்லுாரி வளாகத்தில் ஏப்ரல் 5-ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெற உள்ளன.

இதில், 200 மாணவ – மாணவியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்களுக்கு கல்லுாரியில் கட்டணமின்றி படிக்கவும், விடுதியில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இருபாலருக்கான தடகளம், கூடைப்பந்து, வாலிபால், பால் பேட்மின்டன், நீச்சல், பளு துாக்குதல், கபடி, டென்னிஸ், ஆண்களுக்கான கால்பந்து, ஆணழகன் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் தேர்வுகள் நடக்கின்றன.

விபரங்களுக்கு, 98409 86678, 73583 46875 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top