bat_ball

மார்ச் 8-ல் குமரி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

நாகர்கோவில்: 2026-2027-ம் ஆண்டுக்கான கன்னியாகுமரி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேர்வு வரும் 8-ம் தேதி காலை 7 மணிக்கும், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேர்வு மாலை 3 மணிக்கும் நடைபெறுகிறது. இதைத் தொர்ந்து வரும் 15-ம் தேதி காலை 8 மணிக்கு 14 வயதுக்கு உட்பட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு நடைபெறுகிறது.

19 வயதுக்கு உட்பட்டவர்கள் 1.9.2007 அன்றோ அல்லது அதன் பின்னர் பிறந்திருக்க வேண்டும். 16 வயதிற்கு உட்பட்டவர்கள் 1.9.2010 அன்றோ அல்லது அதன் பின்னர் பிறந்திருக்க வேண்டும். 14 வயதிற்கு உட்பட்டவர்கள் 1.9.2012 அன்றோ அல்லது அதன் பின்னர் பிறந்திருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பாஸ்போர்ட் புகைப்படம், பிறப்பு சான்றதழ் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை நேரில் கொண்டுவர வேண்டும். இத்தகவலை கன்னியாகுமரி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் கே.எஸ். பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

3 thoughts on “மார்ச் 8-ல் குமரி மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு”

  1. The bonuses here are actually usable and not just bait. Had a great run last night and the withdrawal was processed surprisingly quickly. Big thanks to vnxt88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top