USA

அமெரிக்கா 2-வது வெற்றி

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரரும் கேப்டனுமான மோனங்க் படேல் 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றி தனது முதல் அரை சதத்தை கடந்த சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 33 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடிய மிலிந்த் குமார் 20 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்தார். முன்னதாக சஹாயன் ஜகாங்கிர் 22, சாய்தேஜா முக்கமல்லா 17 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

நமீபியா அணி சார்பில் வில்லெம் மைபர்க், ஜெரார்டு எராஸ்மஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கைளை கைப்பற்றினர்.

200 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நமீபியா அணிக்கு லோரன் ஸ்டீன்காம்ப் அதிரடி தொடக்கம் கொடுத்தார். இதனால் அந்த அணி 10.5 ஓவர்களில் 100 ரன்கள் குவித்தது.

லோரன் ஸ்டீன்காம்புக்கு உறுதுணையாக விளையாடிய ஜேன் ஃபிரைலிங்க் 19, ஜான் நிக்கோல் லோஃப்டி-ஈடன் 28 ரன்களில் வெளியேறினர். மட்டையை சுழற்றிய லோரன் ஸ்டீன்காம்ப் 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசிய நிலையில் ஷுபம் ரஞ்சனே பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் நமீபியா ஆட்டம் கண்டது. ஜெரார்டு எராஸ்மஸ் 6, ஜேஜே ஸ்மித் 31, ஸான் கிரீன் 18 ரன்களில் நடையை கட்டினர். 20 ஓவர்களின் முடிவில் நமீபியா அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களே எடுத்தது.

ரூபன் டிரம்பல்மேன் 3, டைலன் லெய்சர் ரன் ஏதும் எடுக்கால் களத்தில் இருந்தனர். அமெரிக்க அணி சார்பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 4 ஆட்டங்களில் 2 தோல்வி, 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் லீக் சுற்றை 3-வது இடத்துடன் நிறைவு செய்துள்ளது. அமெரிக்காவின் நிகர ரன் விகிதம் 0.788 ஆக உள்ளது.

தற்போதைய வெற்றியின் மூலம் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது. ‘ஏ’ பிரிவில் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்த அமெரிக்க அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரிய வரும்.

மறுபுறம் நமீபியா அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. நமீபியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 18-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

4 thoughts on “அமெரிக்கா 2-வது வெற்றி”

  1. The graphics are stunning and the gameplay feels very authentic. I’ve suggested this to a couple of my friends already because it’s just that good. Try vnely88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top