ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து, அறிமுக அணியான இத்தாலியுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 4 விக்கெட்கள் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. தனது 14-வது அரை சதத்தை அடித்த தொடக்க வீரரான ஜார்ஜ் முன்சே 54 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார்.
மற்றொரு தொடக்க வீரரான மைக்கேல் ஜோன்ஸ் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 37 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.5 ஓவர்களில் 126 ரன்கள் குவித்தது. இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடி பிரண்டன் மெக்முல்லன் 18 பந்துகளில், 4 சிக்ஸர்களுடன் 41 ரன்களும் மைக்கேல் லீஸ்க் 5 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்களும் விளாசினர். முன்னதாக கேப்டன் ரிச்சி பெரிங்டன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
208 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இத்தாலி அணியானது ஸ்காட்லாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மைக்கேல் லீஸ்கை சமாளிக்க முடியாமல் 16.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரரான ஜஸ்டின் மோஸ்கா ரன் ஏதும் எடுக்காத நிலையில் மைக்கேல் லீஸ்க் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற ஜேஜே ஸ்மட்ஸ் 11 பந்துகளில், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் பிராடு கர்ரி பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அந்தோனி மோஸ்கா 13 ரன்னில் நடையை கட்டினார். 40 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில் சகோதரர்களான ஹாரி மனென்டி, பென் மனென்டி ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் இத்தாலி அணி 12 ஓவர்களில் 113 ரன்கள் குவித்தது.
சீராக ரன்கள் சேர்த்த ஹாரி மனென்டி 25 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் மைக்கேல் லீஸ்க் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 40-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. தனது முதல் அரை சதத்தை அடித்த பென் மனென்டி 31 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் இத்தாலி தோல்வியை நோக்கி பயணித்தது. கிராண்ட் ஸ்டீவர்ட் 2, ஜியான்-பியரோ மீட் 0, கிரிஷன் கலுமககே 3, தாமஸ் டிராக் 2, அலி ஹசன் 0 ரன்களில் நடையை கட்டினர். கேப்டன் வெய்ன் மேட்சன் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக களமிறங்கவில்லை. இத்தாலி அணி தனது கடைசி 7 விக்கெட்களை 21 ரன்களுக்கு கொத்தாக தாரை வார்த்தது.
ஸ்காட்லாந்து அணி தரப்பில் மைக்கேல் லீஸ்க் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். மார்க் வாட் 2 விக்கெட்களை வீழ்த்தினார். பிராடு கர்ரி, பிராடு வில், ஆலிவர் டேவிட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்காட்காலந்து அணி 2 புள்ளிகளை பெற்றது. அந்த அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. ஸ்காட்லாந்து தனது முதல் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வி கண்டிருந்தது.


This casino brings a real luxury feel to the screen. The games are fair and the withdrawals are processed without any stress. Big thumbs up for jilimaxcasino.
Finally found a site that doesn’t make registration a headache. Everything was set up in minutes and I started winning shortly after. Love br166bt so far.
Great platform with a very professional feel. The promotions they offer are actually useful and easy to claim. Definitely give supermpologin a shot.