mandhana_2

ஸ்மிருதி மந்தனா விளாசில் ஆர்சிபி சாம்பியன்

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வதோதராவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 203 ரன்கள் எடுத்தது. அதனைத்தொடர்ந்து, இமாலய இலக்கை சேஸிங் செய்த ஆர்சிபி அணி தொடக்க வீராங்கனையான கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்களில் நடையைக்கட்டினாலும், நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்தினார்.

RCB 2

ஜார்ஜியா வோல் தம் பங்கிற்கு 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்களுடைய அதிரயால் ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதன்முலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆர்சிபி அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

4 thoughts on “ஸ்மிருதி மந்தனா விளாசில் ஆர்சிபி சாம்பியன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top