ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (7-ம் தேதி) இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இதே பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தானும் வரும் 15-ம் தேதி லீக் சுற்றில் மோதும் வகையில் அட்டவணை உள்ளது. ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்காது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:
இந்தியா – பாகிஸ்தான் போட்டி தொடர்பான நிலைமை எளிதான காரியம் அல்ல என்று நான் நினைக்கிறேன். இது என் கையில் இல்லை. ஐசிசி ஏதேனும் ஒரு தீர்வை யோசித்துக்கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இது மற்றொரு அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது நாட்டிலிருந்தோ வந்திருக்கிறது. இந்த நிலையில் ஐசிசி எப்படி உதவ முடியும்?
பாகிஸ்தானின் முடிவு என் கட்டுப்பாட்டில் இல்லை. அவர்களது முடிவுகளை என்னால் எடுக்க முடிந்தால் நன்றாக இருக்கும், ஆனால் அது அவர்களுடைய விருப்பம். பிப்ரவரி 15-ம் தேதி கொழும்பு நகரில் போட்டியில் விளையாட வேண்டும் என்று எங்களிடம் கூறப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பையில் நாங்கள் பாகிஸ்தான் அணியை 3 முறை எதிர்கொண்டோம். அவற்றில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றோம். அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.
அதேபோல், கொழும்பில் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நாங்கள் நிச்சயமாக விளையாடுவோம். எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர்கள்தான் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஐசிசி போட்டி அட்டவணையை வெளியிட்டுவிட்டது. எங்கள் விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன, நாங்கள் கொழும்புக்கு செல்கிறோம்.
எங்கள் மனநிலை மிகவும் தெளிவாக உள்ளது. பிசிசிஐ மற்றும் இந்திய அரசாங்கம் ஐசிசியுடன் இணைந்து ஒரு நடுநிலையான இடத்தில் விளையாடுவது குறித்து முடிவு செய்துள்ளன. அணியில் நடக்கும் விவாதமும் தெளிவாக உள்ளது. முதலில், நாங்கள் 7-ம் தேதி போட்டியில் விளையாடுவோம். பிறகு (நமீபியாவுக்கு எதிரான போட்டிக்கு) டெல்லிக்குச் செல்வோம், அதன்பிறகு கொழும்புக்குச் செல்வோம்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.


Super easy to get started and the interface is very user friendly. I managed to hit a jackpot on my second try. I’m staying with jili56comlogin for sure.
The community here is great and the promotions are always exciting. It feels like a premium experience every time I log in to phjilipark22.
I’ve tried a few others, but this one feels the most reliable. The payouts are quick and the interface is very friendly for beginners. jiliuucom
Super easy login process and the games load instantly. I love how straightforward everything is here. Best experience so far with 688jililogin
Best experience so far in the PH region. The games are fair and the customer support is actually helpful. Highly recommended for everyone! phjuan635
Simple, clean, and effective. I love how easy it is to navigate through the different categories. Definitely visiting bd09det again.