jokovic

அரை இறுதியில் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 11-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 4-ம் நிலை வீரரும் 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரென்சோ முசெட்டியுடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஜோகோவிச்சுக்கு கடும் சவால் கொடுத்தார் முசெட்டி. முதல் 2 செட்களையும் 6-4, 6-3 என கைப்பற்றினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் துரதிருஷ்டவசமாக 3-வது செட்டில் முசெட்டி 1-3 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த போது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் ஜோகோவிச் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top