‘டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம் 2026’ வரும் 29 முதல் 31-ம் தேதி வரை சென்னை வண்டலூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்டிஏடி சைக்கிளிங் ஓடுதளத்தில் நடைபெறுகிறது. இது யூனியன் சைக்ளிஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்பின் கிளாஸ் 2 வகை போட்டியாகும்.
இந்த போட்டியை தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து நடத்துகிறது. இந்த சர்வதேச டிராக் சைக்கிளிங் பந்தயத்தில் 11 நாடுகளைச் சேர்ந்த 70 சர்வதேச சைக்கிளிங் வீரர்கள் மற்றும் 50 இந்திய சைக்கிளிங் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இதில் எஸ்டிஏடி விடுதிகளைச் சேர்ந்த சைக்கிளிங் வீரர்களும் அடங்குவார்கள். இந்த பந்தயத்தில் ஸ்பிரிண்ட், தனிநபர் பர்சூட், டீம் பர்சூட்,1 கிமீ டைம் ட்ரையல், கெய்ரின், டீம் ஸ்பிரிண்ட், ஸ்கிராட்ச் ரேஸ், ஆம்னியம், மேடிசன், பாயின்ட்ஸ் ரேஸ் மற்றும் எலிமினேஷன் ஆகிய 11 போட்டிகள் அடங்கும். டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயத்தின் மொத்த பரிசுத் தொகை 10,000 அமெரிக்க டாலர்கள் ஆகும். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.9.16 லட்சம் ஆகும்.


The customer support is top notch and they solved my deposit issue in minutes. Great service and fair odds at okebet36.