நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியாக விளையாடி மிரட்டி வருகின்றனர். ஆனால் தொடக்க வீரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் இதுவரை 16 ரன்களே எடுத்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: சஞ்சு சாம்சன் நம்பிக்கையைப் பெறுவதற்கும், ஃபார்மை மீண்டும் பெறுவதற்கும் ஒரே ஒரு சிறந்த ஆட்டம் மட்டுமே தேவை.
உலகக் கோப்பை தொடரையொட்டி சரியான நேரத்தில் வீரர்களின் உயர்மட்ட செயல்திறனைக் கண்டறிவது முக்கியம். சஞ்சு சாம்சன் நன்றாகப் பயிற்சி செய்கிறார், பந்தை நன்றாக விளாசுகிறார். உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு எங்களுக்கு இன்னும் இரண்டு ஆட்டங்கள் உள்ளன. இதனால் சஞ்சு சாம்சன் தனது ஃபார்மைக் கண்டுபிடிப்பார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.


Great selection of games and the account setup took less than two minutes. Really impressed with the overall quality of jilibet777loginregister.
Super impressed with the game variety here. Everything loads quickly and the customer support is actually helpful. Highly recommend vnop88 to anyone who loves online gaming.