ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில் 2 முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
இதே பிரிவில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து, அறிமுக அணியான இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ம் தேதி ஸ்காட்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கு இந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாய் ஹோப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்டு, ரோவ்மன் பவல் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் விளையாடி 11 பேர் இம்முறையும் இடம் பெற்றுள்ளனர்.
அணி விவரம்: ஷாய் ஹோப் (கேப்டன்), ஜான்சன் சார்லஸ், ராஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டு, ஷிம்ரன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடகேஷ் மோட்டி, ரோவ்மன் பவல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், குவென்டின் சாம்சன், ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்

