Sunrisers Eastern Cape are crowned champions of the SA20 season 4 Image 1

சன்ரைசர்ஸ் 3-வது முறையாக சாம்பியன்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 தொடரில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 3-வது சாம்பியன் பட்டம் வென்றது.

கேப்டவுன் நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 56 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் விளாசினார். பிரைஸ் பார்சன்ஸ் 30, ஷெர்பேன் ரூதர்போர்டு 17 ரன்கள் சேர்த்தனர். சன்ரைசர்ஸ் அணி தரப்பில் மார்கோ யான்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

159 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சன்ரைசடர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேத்யூ பிரிட்ஸ்கே 49 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 68 ரன்களும் கேப்டன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 63 ரன்களும் விளாசினர். முன்னதாக குயிண்டன் டி காக் 18, ஜானி பேர்ஸ்டோ 0, ஜோர்டான் ஹர்மான் 3, ஜேம்ஸ் கோல்ஸ் 1 ரன்களில் நடையை கட்டினர்.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளிலும் கோப்பையை வென்றிருந்தது. ஆட்ட நாயகனாக டெவால் பிரேவிஸும், தொடர் நாயகனாக குயிண்டன் டி காக்கும் தேர்வானார்கள். குயிண்டன் டி காக் இந்த தொடரில் 390 ரன்கள் குவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top