இந்திய மகளிர் கால்பந்து கோச் பமீலா கான்டி

17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு முன்னாள் இத்தாலி அணி வீராங்கனை பமீலா கான்டி பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

17 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டியில் பங்கேற்கவுள்ளது. அந்தப் போட்டிக்கு முன்னதாக பமீலா கான்டி இந்திய அணியினருடன் இணைவார் என அகில இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்திய சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கான பயிற்சியாளராக கோஸ்டா ரிகா வீராங்கனை அமேலியா வால்வேர்டே அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 17-ம் தேதித வரை சீனாவில் நடைபெறவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top