sindhu

கால் இறுதியில் பி.வி.சிந்து தோல்வி

இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து, முதல் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யு ஃபெயுடன் மோதினார். இதில் சிந்து 13-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்சயா சென், உலகத் தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் பனிச்சஃபோன் தீரத்சகுலை எதிர்த்து விளையாடினார். 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 18-21, 20-22 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top