ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான இன்று (23-ம் தேதி) ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-2, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 37-ம் நிலை வீரரான பிரான்ஸின் கோரன்டின் மவுடெட்டை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் அல்கராஸின் 100-வது வெற்றியாக இது அமைந்தது.
