மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 400-வது வெற்றியை நெருங்குகிறார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 5-ம் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் தகுதி நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தையும், 4-ம் நிலை வீரரும், 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 141-ம் நிலை வீரரான இத்தாலியின் பிரான்செஸ்கோ மேஸ்ட்ரெல்லியையும் வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச்சின் 399-வது வெற்றியாக இது அமைந்தது. 400 வெற்றிகள் என்ற மைல்கல் சாதனையை படைக்க அவருக்கு மேற்கொண்டு ஒரு வெற்றி மட்டுமே தேவையாக உள்ளது. நாளை (24ம் தேதி) நடைபெறும் 4-வது சுற்றில் இந்த வெற்றியை ஜோகோவிச் வசப்படுத்தி வரலாற்று சாதனை படைக்க உள்ளார்.

