துபாய்
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி 727 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். 2019-ம் ஆண்டுக்கு பிறகு மந்தனா தற்போதுதான் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வார்ட் (719) 19 புள்ளிகளை இழந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் நடாலி ஷிவர் பிரன்ட் 719 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 14-வது இடத்திலும், ஹர்மன்பிரீத் கவுர் 15-வது இடத்திலும் உள்ளனர்.