தோல்விகளை சந்திக்காத கேப்டன் தெம்பா பவுமா

ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்க அணி.

283 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டத்தில் 83.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. மார்க்ரம் 207 பந்துகளில், 14 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் விளாசினார். தெம்பா பவுமா 134 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்தார்.

temba Bavuma 1

இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. ஆட்ட நாயகனாக எய்டன் மார்க்ரம் தேர்வானார். ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி 27 வருடங்களுக்கு பிறகு தற்போது தெம்பா பவுமா தலைமையில் பட்டம் வென்றுள்ளது.

மேலும் தெம்பா பவுமா டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்வியை சந்திக்காத கேப்டனாக வலம் வருகிறார். தொடர்ச்சியாக அவர், கேப்டனாக 9 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். இந்த வகையில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்த இங்கிலாந்தின் பெர்சி சாப்மேனுடன் (9 வெற்றிகள்) சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார் தெம்பா பவுமா.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top