Nitish Rajagopal

நிதிஷ் ராஜகோபால் அதிரடியில் சேலம் வெற்றி

கோவை

டிஎன்பிஎல் கிரிக்கெட் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

கோவையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மதுரை அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அதீக் உர் ஹர்மான் 21 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்தார்.

ராம் அரவிந்த் 37, என்.எஸ்.சதுர்வேத் 32, பாலச்சந்தர் அனிருத் 23 ரன்கள் சேர்த்தனர்.
சேலம் அணி தரப்பில் எம். முகமது 2 விக்கெட்களையும், ரஹில், எஸ்.அஜித்ராம், ஹரிஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த சேலம் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிதிஷ் ராஜகோபால் 41 பந்துகளில், 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

அவருக்கு உறுதுணையாக விளையாடி ஆர். கவின் 39 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 48 ரன்கள் சேர்த்தார். மதுரை அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங், முருகன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top