டப்ளின்
அயர்லாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று (மே 23) டப்ளின் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது.
கீசி கார்ட்டி 109 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் விளாசினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் கீசி கார்ட்டியின் 2-வது சதமாக இது அமைந்தது.

இந்த ஆட்டத்தின் போது 43.1-வது ஓவரில் களமிறங்கிய மேத்யூ ஃபோர்டு அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் அரை சதம் விளாசி சாதனை படைத்தார்.
Fastest fifties (Men’s ODIs)
Player | Team | Opposition | Balls | Year |
AB de Villiers | South Africa | West Indies | 16 | 2015 |
Matthew Forde | West Indies | Ireland | 16 | 2025 |
Sanath Jayasuryia | Sri Lanka | Pakistan | 17 | 1996 |
Kusal Perera | Sri Lanka | Pakistan | 17 | 2015 |
Martin Guptill | New Zealand | Sri Lanka | 17 | 2015 |
Liam Livingstone | England | Netherlands | 17 | 2022 |
இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 2015-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 16 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக அடிக்கப்பட்ட அரை சதமாக இது இருந்தது. இந்த சாதனையை தற்போது மேத்யூ ஃபோர்டு சமன் செய்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 19 பந்துகளை எதிர்கொண்ட அவர், 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்தார்.
துரதிருஷ்டவமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் முடிவடைந்ததும் மழை பெய்ததால் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் அயர்லாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.
அந்த அணி முதல் ஒருநாள் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (மே 25) நடைபெறுகிறது.