முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே அணி பாலோ-ஆன்

நாட்டிங்காம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 565 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 88 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 498 ரன்கள் குவித்தது. ஸாக் கிராவ்லி 124, பென் டக்கெட் 140, ஜோ ரூட் 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

ஆலி போப் 169, ஹாரி புரூக் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று ( 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 96.3 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 565 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஆலி போப் 171, ஹாரி புரூக் 58, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜேமி ஸ்மித் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஜிம்பாப் அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசாராபானி 3 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணி 63.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக தொடக்க வீரரான பிரையன் பென்னட் 143 பந்துகளில், 26 பவுண்டரிகளுடன் 139 ரன்கள் எடுத்தார். இது அவருக்கு 2-வது சதமாக அமைந்தது.

பென் கரண் 6, கேப்டன் கிரேய்க் இர்வின் 42, சீன் வில்லியம்ஸ் 25, சிக்கந்தர் ராஸா 7, வெஸ்ஸி மாதவரே 0, தஃபட்ஸ்வா சிகா 22, தனகா சிவாங்கா 2, முசாராபானி 12 ரன்களில் நடையை கட்டினர். இங்கிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளரான ஷோயிப் பஷீர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

கஸ் அட்கின்சன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் சேம் குக், ஜோஷ் டங்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 300 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ-ஆன் பெற்று 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்தது.

பிரையன் பென்னட் ஒரு ரன்னில் கஸ் அட்கின்சன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். கேப்டன் கிரெய்க் எர்வின் 4 ரன்களில் ஜோஷ் டங்க் பந்தில் வெளியேறினார். பென் கரண் 4, சீன் வில்லியம்ஸ் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 270 பின்தங்கிய நிலையில் இன்றைய (24-ம் தேதி) 3-ம் நாள் ஆட்டத்தை விளையாடுகிறது ஜிம்பாப்வே அணி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top