Msd

சிஎஸ்கே அடுத்த சீசனுக்கு ரெடியாகுது !

புதுடெல்லி

அடுத்த வருடத்துக்கான அணியை கட்டமைக்கும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி படுதோல்விகளை சந்தித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. எப்போதுமே அனுபவ வீரர்களின் திறனை சிஎஸ்கே அணி பெரிதும் சார்ந்திருக்கும். ஆனால் இம்முறை ராகுல் திரிபாதி, டேவன் கான்வே, தீபக் ஹூடா, விஜய் சங்கர் உள்ளிட்டோர் ஏமாற்றம் அளித்தனர்.

இதையடுத்து ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷித், டெவால்ட் பிரேவிஸ், உர்வில் படேல், நூர் அகமது உள்ளிட்ட இளம் வீரர்களை கொண்டு அடுத்த ஆண்டுக்கான அணியை கட்டமைக்கும் பணியை சிஎஸ்கே அணி தொடங்கி உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறும்போது, “அடுத்த சீசனுக்கான அணியை கட்டமைக்கும் பணியை ஏற்கெனவே தொடங்கிவிட்டோம்.

எங்கள் பேட்டிங் துறையைப் பொறுத்தவரை, நாங்கள் எங்களை வெளிப்படுத்த விரும்புகிறோம். கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் அதைத்தான் செய்தோம். நாங்கள் அதை முன்னோக்கி நகர்த்த விரும்புகிறோம்.

பந்துவீச்சை பொறுத்தவரயில் பவர்பிளேவுக்குப் பிறகு சிறப்பாக வீசக்கூடிய ஒரு கூடுதல் பந்து வீச்சாளர் எங்களுக்கு தேவை. கடந்த இரண்டு ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம், அதே வழியில் தொடர விரும்புகிறோம்.

நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இழந்த போதே அடுத்த சீசனுக்கான பதில்களைப் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டோம். சரியான அணிச் சேர்க்கையை பெறுவதும், ஏலத்தில் நீங்கள் குறிவைக்கக்கூடிய வீரரைப் பெறுவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். சீசனின் தொடக்கத்தில், நாங்கள் பேட்டிங் துறையில் தடுமாறினோம். ஆனால் இப்போது அதில் மேம்பட்டுள்ளோம்” என்றார்.

3 thoughts on “சிஎஸ்கே அடுத்த சீசனுக்கு ரெடியாகுது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top