சிகாகோ
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் ஃபைரூஸ் அபோல்கெய்ரிடம் 7-11, 11-8, 4-11, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 28 நிமிடங்களில் முடிவடைந்தது.

ஆடவர் ஒற்றையர் பரிவில் இந்தியாவின் அபய் சிங் 6-11, 6-11, 9-11 என்ற நேர் செட் கணக்கில் எகிப்தின் யூசுப் இப்ராஹிமிடமும், வீர் சோட்ராணி 11-7, 7-11, 3-11, 10-12 என்ற செட் கணக்கில் எகிப்தின் அலி ஃபராக்கிடமும், ரமித் தாண்டன் 9-11, 7-11, 11-5, 11-8, 8-11 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் மர்வான் எல்ஷோர்பாகியிடமும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர். இதன் மூலம் இந்தத் தொடரில் இந்தியாவின் சவால் 2-வது சுற்றுடன் முடிவுக்கு வந்தது.