சென்னை
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் நட்சத்திர ஸ்பின்னரான யுவேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஐபிஎல் தொடரில் அவர் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்துவது இது 2வது முறையாகும்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சிஎஸ்கே அணி முதலில் பேட் செய்த நிலையில் 19-வது ஓவரை வீசிய யுவேந்திர சாஹல் கடைசி 3 பந்துகளில் தீபக் ஹூடா (2), அன்ஷுல் கம்போஜ் (0), நூர் அகமது (0) ஆகியோரை ஆட்டமிழக்கக் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த ஓவரின் 2-வது பந்தில் எம்.எஸ்.தோனியையும் (11), சாஹல் அவுட்டாக்கியிருந்தார்.
ஐபிஎல் தொடரில் அவர் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்துவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2022 -ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2 முறை
முறை ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர்கள் பட்டியலில் சாஹல் இணைந்துள்ளார். இதில் அமித் மிஸ்ரா முதலிடத்தில் உள்ளார். அவர் 3 முறை ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். அடுத்த இடத்தில் யுவராஜ் சிங் உள்ளார். அவர், 2 முறை ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 24 முறை பந்துவீச்சில் ஹாட்ரிக் சாதனையை படைக்கப்பட்டுள்ளது.

