சிஎஸ்கேவுக்கு பதிலடி கொடுக்குமா மும்பை இந்தியன்ஸ்?

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பியன்​களான மும்பை இந்​தி​யன்ஸ் – சிஎஸ்கே அணி​கள் மோதுகின்​றன.

ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்​தி​யன்ஸ் அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 7-வது இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக டெல்லி கேப்​பிடல்​ஸ், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​களை வீழ்த்​திய உற்​சாகத்​தில் இன்​றைய ஆட்​டத்தை சந்​திக்​கிறது. மறு​புறம் தோனி தலை​மையி​லான சிஎஸ்கே அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் கடைசி இடத்​தில் உள்​ளது.

சீசனை வெற்​றி​யுடன் தொடங்​கிய சிஎஸ்கே அணி அதன் பின்​னர் தொடர்ச்​சி​யாக 5 ஆட்​டங்​களில் தோல்வி அடைந்த நிலை​யில் கடைசி​யாக லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. இந்த வெற்றி சிஎஸ்​கேவுக்கு நம்​பிக்​கையை கொடுத்துள்​ளது.

லக்னோ அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பேட்​டிங்​கில் ஷேக் ரஷீத் அறி​முக வீர​ராக இடம்பெற்று 19 பந்​துகளில் 27 ரன்​கள் சேர்த்து கவனம் ஈர்த்​தார். இதே​போன்று அன்​ஷுல் கம்​போஜ், அதிரடி பட்​டாளங்​கள் நிறைந்த லக்னோ அணிக்கு எதி​ராக சிறப்​பாக செயல்​பட்​டிருந்​தார்.

CSK 3

ரச்​சின் ரவீந்​தி​ரா, ஷிவம் துபே ஆகியோர் பார்​முக்கு திரும்பி இருப்​பது பேட்​டிங்​குக்கு பலம் சேர்க்​கக்​கூடும். தோனி மீண்​டும் பினிஷர் ரோலை சிறப்​பாக செய்​யத் தொடங்​கி உள்​ளது அணி​யின் முன்​னேற்​றத்​துக்கு சீரான வகை​யில் உதவக்​கூடும். இன்றைய ஆட்டத்தில் மோசமான பார்ம் காரணமாக ராகுல் திரி​பா​தி க்​கப்​பட்டு டெவால்ட் பிரே​விஸ் களமிறக்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

ஏனெனில் கடந்த சீசன்​களில் டெவால்ட் பிரே​விஸ், மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்​காக விளை​யாடி உள்​ளார். பந்து வீச்சை பொறுத்​தவரை​யில் கலீல் அகமது, அன்​ஷுல் கம்​போஜ், நூர் அகமது ஆகியோர் மும்பை பேட்​ஸ்​மேன்​களுக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும்.

மும்பை அணி, ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பந்து வீச்​சில் சிறப்​பாக செயல்​பட்​டது. டிரென்ட் போல்ட், ஜஸ்​பிரீத் பும்ரா ஆகியோ​ரும் ரித​முக்கு திரும்பி உள்​ளனர். அதேவேளை​யில் ஆல்​ர​வுண்​ட​ராக ஹர்​திக் பாண்​டி​யா​வுடன் வில் ஜேக்​ஸும் சிறந்த பங்​களிப்பை வழங்கி வரு​கிறார்.

பேட்​டிங்​கில் ரியான் ரிக்​கெல்​டன் சீரான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி வரு​கிறார். ரோஹித் சர்மா கடந்த ஆட்​டத்​தில் 16 பந்​துகளில் 26 ரன்​கள் விளாசி பார்​முக்கு திரும்​பியிருப்​பது அணிக்கு கூடு​தல் பலம் சேர்க்​கக்​கூடும். சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்​மா, நமன்​திர் ஆகியோ​ரும் சிஎஸ்கே பந்து வீச்​சாளர்​களுக்கு தங்​களது தாக்​குதல் ஆட்​டத்​தால் நெருக்​கடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

நடப்பு சீசனில் மும்பை – சிஎஸ்கே அணி​கள் 2-வது முறை​யாக மோதுகின்​றன. கடந்த மாதம் 23-ம் தேதி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்​கே​விடம் 4 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் மும்பை அணி தோல்வி அடைந்​திருந்​தது. இந்த தோல்விக்கு இன்​றைய ஆட்​டத்​தில் பதிலடி கொடுக்​க ஹர்​திக்​ பாண்​டி​யா தலை​மையி​லான மும்​பை அணி முயற்​சிக்​கக்​கூடும்​.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top