Divgesh

நோட்​புக் செலிபிரேஷனால் திக்வேஷ் ராத்திக்கு சிக்கல்

கொல்கத்தா

ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 8) பிற்​பகல் 3.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. ரிஷப் பந்த் தலைமயி​லான லக்னோ அணி​யும் 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது. கொல்​கத்தா அணி தனது கடைசி ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை 80 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது. அதேவேளை​யில் லக்னோ அணி தனது கடைசி ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணியை 12 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வென்​றிருந்​தது.

ஹைத​ரா​பாத்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி​யின் பேட்​டிங்​கில் நடு​வரிசை​யில் வெங்​கடேஷ் ஐயர், ரகு​வன்​ஷி​யும் பின்​வரிசை​யில் ரிங்கு சிங்​கும் அபார​மாக செயல்​பட்​டனர். அஜிங்க்ய ரஹானே​வும் உரிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தார். இன்​றைய ஆட்​டத்​தில் குயிண்​டன் டி காக்​குடன் ரகு​வன்ஷி தொடக்க வீர​ராக களமிறங்க வாய்ப்பு உள்​ளது.

லக்னோ அணி​யானது தனது கடைசி ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸை வீழ்த்​திய உற்​சாகத்​தில் களமிறங்​கு​கிறது. பேட்​டிங்​கில் மிட்​செல் மார்​ஷின் அதிரடி பலம் சேர்க்​கிறது. எய்​டன் மார்க்​ர​மும் பார்​முக்கு திரும்​பி​யிருப்​பது அணி​யின் பலத்தை அதி​கரித்​துள்​ளது. பின் வரிசை​யில் ஆயுஷ் பதோனி, டேவிட் மில்​லர் பலம் சேர்ப்​பவர்​களாக உள்​ளனர். நிக்​கோலஸ் பூரன், ரிஷப் பந்த்​ ஆகியோர் மீண்டும் பார்முக்கு திரும்பினால் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.

லக்னோ அணி​யின் பந்து வீச்​சில் இளம் வீர​ரான திக்​வேஷ் ராத்தி கவனம் ஈர்த்து வரு​கிறார். இம்​ரான் தாஹிர் போன்ற சிகை அலங்​காரம், சுனில் நரேன் போன்ற பந்து வீச்சு பாணி, கெஸ்​ரிக் வில்​லி​யம்ஸ் போன்ற ‘நோட்​புக் கொண்​டாட்​டம்’ ( நோட்​புக் செலிபிரேஷன்) ஆகிய​வற்​றால் இந்த சீசனில் பிரபல​மாகி உள்ள திக்​வேஷ் ராத்தி மீது அதிக எதிர்​பார்ப்பு உள்​ளது. மும்பை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அவர், 4 ஓவர்​களை வீசி 21 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​யிருந்​தார்.

இந்த சீசனில் 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​யுள்ள அவர், ஓவருக்கு சராசரி​யாக 7.62 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​துள்​ளார். லென்ந்த்​தில் கட்​டுப்​பாடு, புத்​தி​சாலித்​தன​மான வேரியேஷன் ஆகியவை திக்​வேஷின் பலமாக உள்​ளது. எனினும் அவரது ‘நோட்​புக் கொண்​டாட்​டம்’ சர்ச்​சை​யாகி உள்​ளது. பஞ்​சாப் மற்​றும் மும்பை அணி​களுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் விக்​கெட் கைப்​பற்​றியதும் திக்​வேஷ் ராத்தி ‘நோட்​புக் கொண்​டாட்​டத்​தில்‘ ஈடு​பட்​டார். இதனால் அவருக்கு இரு முறை அபராதம் வி​திக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தகு​தி​யிழப்பு புள்​ளி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இன்​றைய ஆட்​டத்​தி​லும் அவர், அபராதத்தை பெற்​றால்​ ஒரு ஆட்​டத்​தில்​ விளை​யாடு​வதற்​கான தடையை எ​திர்​கொள்​ளக்​கூடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top