பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 5டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதலில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டிகளில்4க்கு 1 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது.
தற்போது நேப்பியர் மைதானத்தில் முதல் ஒருநாள் நடந்தது.முதலில்பேட் செய்த நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேன் 111 பந்தில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் 132 ரன் விளாசினார்.

மிட்செல் 76 ரன், முகமது அப்பாஸ் 26 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர் உதவியுடன் 52 ரன் விளாசியதால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன் குவித்தது.
அதன்பிறகு விளையாட பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 78, சல்மான் ஆகா 58, உஸ்மான் கான் 39, அப்துல்லா சபீக் 36 ரன் எடுத்தனர்.
மற்றவர்கள் சொற்ப ரன்னில் வீழ்ந்ததால் பாகிஸ்தான் 44.1 ஓவரில் 271 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன் விருது மார்க் சாப்மேனுக்கு வழங்கப்பட்டது. 2வது ஒருநாள் போட்டி புதன்கிழமை நடக்கிறது.