சிஎஸ்கேவுக்காக அதிக ரன் சாதனை படைத்தார் தோனி

சென்னை: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த சிஎஸ்கே வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

MSD 1

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 28 அன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் குவித்திருந்த சுரேஷ் ரெய்னாவின் சாதனயை முறியடித்தார். ரெய்னா 176 ஆட்டங்களில் விளையாடி 4,687 ரன்கள் குவித்திருந்தார். தோனி 236 ஆட்டங்களில் விளையாடி 4,699 ரன்கள் குவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top