ரூ.27 கோடிக்கு வொர்த்தா ரிஷப் பண்ட்?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட். கடந்த ஆண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக இருந்தவர், இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் தட்டித்தூக்கப்பட்டவர். இந்த சீசனுக்காக விறுவிறுப்பாக தயாராகி வருகிறார்.

சாம்பியன் டிராபி கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தும், ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட்டை கீழே தள்ளி கே.எல். ராகுல் முந்தி விட்டார். இது ஐபிஎல் தொடர், எப்படி விளையாடப்போகிறார் ரிஷப் பண்ட்.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

இதே ரிஷப் பண்ட் பேட்டி:

நான் எப்போதும் சொல்வதில் அல்ல,செயலில் காட்ட விரும்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் இதை பயனுள்ள தகவல்தொடர்பு மூலம் கற்றுக்கொண்டேன். நிர்வாகம் மற்றும் வீரர்கள் எங்கள் பிணைப்பை வலுப்படுத்துகிறார்கள். உறுதிப்படுத்த ஒற்றை தொடர்பு சேனல் இருப்பது அவசியம். அனைவரும் ஒரே இலக்குகளை நோக்கி வேலை செய்கிறார்கள்.

என்னை பொறுத்தவரையில் வீரர்கள் தங்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்தும் சூழலை உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய இடத்தை வளர்க்கவும். எளிய யோசனை கூறவும் வேண்டும். ஆனால் அதை செயல்படுத்துவதற்கு கணிசமான அளவு சம்பந்தப்பட்ட அனைவரின் முயற்சியும் தேவைப்படுகிறது’ என்றார்.

இந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் தனது முதல் போட்டியில் வரும் 24ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியைத்தான் எதிர்கொள்கிறது. அப்போது தெரிந்து விடும் ரிஷப் பண்ட் ரூ.27 கோடி ஏல மதிப்பிற்கு உரியவரா, இல்லையா என்று.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top