43 வயசுலயும் அசத்தும் டோனி; மிரண்டு நிற்கும் ஹர்பஜன்

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் டோனி தயாராகி வருகிறார். 43 வயதான அவர் எப்படி ஆடப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

டோனி

இந்த கேள்வி டோனி தலைமையின் கீழ் விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கிறகும் வந்துள்ளது. இதுபற்றி டோனியிடமே அவர் கேட்டுள்ளார்.

அதற்கு டோனி அளித்த பதில் குறித்து ஹர்பஜன்சிங் கூறியதாவது:

இன்றும் ஐபிஎல் ரசிகர்கள் பார்க்க விரும்பும் போட்டியாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணிதான் உள்ளது. காரணம் டோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடுமையான பயிற்சிக்குப் பிறகு டோனி விளையாட வருகிறார்.

டோனி பங்கேற்கும் ஒரே தொழில்முறை கிரிக்கெட் நிகழ்வாக ஐபிஎல் இருப்பதால் இந்த ஐபிஎல் தொடர் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுததி உள்ளது. அவரது உடற்தகுதியை பராமரிப்பது, குறிப்பாக 43 வயதில் மிரட்டுவது முக்கிய பணியாகும்.சமீபத்தில் ஒரு திருமண விழாவில் டோனியை பார்த்த போது அவர் எவ்வளவு பிட்டாக இருக்கிறார் என்பதை பார்த்து திகைத்துப்போனேன்.

நான் அவரிடம், இந்த வயதிலும் இவ்வளவு பிட்டாக இருக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்?. இது உங்களுக்கு கடினமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்,’ உண்மைதான். இருப்பினும் இது தான் எனக்குப் பிடித்தமான ஒன்று. நான் அதைச் செய்ய விரும்புகிறேன். அதற்காக விளையாடுகிறேன்’ என்றார்.

MS DHONI

இந்த பசி இருக்கும் வரை, எந்த கிரிக்கெட்டையும் விளையாடாமல் அதைச் செய்ய முடியும். சென்னை சூப்பர்கிங்ஸ் பயிச்சி முகாமில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் 2-3 மணி நேரம் ‘தல’ வலை பயிற்சி செய்கிறார்.

இந்த வயதிலும் முதலில் மைதானத்திற்கு வருவதும் கடைசியாக வெளியேறுவதும் அவர்தான். அதுதான் வித்தியாசம்’ என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top