ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 18-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இப்போதே ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் பேச்சு வலுவாக அடிபடத் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு அணிகளின் சாதனைகள், வேதனைகள், சோதனைகளை ரசிகர்கள் அலசி ஆராயத் தொடங்கிவிட்டனர். அவர்களுக்காக பயனுள்ள சில தகவல்களை வழங்குகிறோம்.
ஐபிஎல் தொடரில் தோல்விகளில் ‘சதம் அடித்த’ அணிகள்:
1. அதிக தோல்விகளை சந்தித்த அணிகளின் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸுக்கு முதலிடம். அந்த அணி இதுவரை 252 ஆட்டங்களில் விளையாடி 135 தோல்வியை சந்தித்துள்ளது.

2. பஞ்சாப் கிங்ஸ் அணி 246 ஆட்டங்களில் விளையாடி 134 தோல்விகளை சந்தித்து அதிக தோல்விகளை சந்தித்த அணிகளின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

3. ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத நிலையில் ‘இ கப் சாலா நம்தே’ என கோஷமிடும் ஆர்சிபி 256 ஆட்டங்களில் விளையாடி 129 தோல்விகளை எதிர்கொண்டுள்ளது.
4. மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கேகேஆர் 252 ஆட்ங்களில் விளையாடி 117 தோல்விகளை எதிர்கொண்டுள்ளது.
5. ஐந்து முறை மகுடம் சூடியுள்ள மும்பை இந்தியன்ஸ் 261 ஆட்டங்களில் விளையாடி 115 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது.
6. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 222 ஆட்டங்களில் விளையாடி 107 தோல்விகளை பதிவு செய்துள்ளது.