மெல்பர்ன்
நடப்பு ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் முதல் சுற்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் இன்று (மார்ச் 16) நடைபெற்றது.
இதில் மெக்லாரன் அணியைச் சேர்ந்த லாண்டோ நொர்ரிஸ் பந்தய தூரத்தை 1:42:06.304 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

ரெல் புல் அணியைச் சேர்ந்த மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் 0.895 விநாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்டு 2-வது இடத்தையும், மெர்சிட்ஸ் அணியின் ஜார்ஜ் ரஸ்ஸல் 8.481 விநாடிகள் கூடுதலாக எடுத்துக் கொண்டு 3-வது இடத்தையும் பிடித்தனர்.
7 முறை சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் 10-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். அவர், இந்த சீசனில் பெராரி அணிக்காக முதன்முறையாக களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லாண்டோ நொர்ரிஸை விட இலக்கை அடைவதற்கு கூடுதலாக +22.473 விநாடிகளை எடுத்திருந்தார் லீவிஸ் ஹாமில்டன்.