ரொனால்டோ அசத்தல் கோலால் சவுதி காலிறுதிக்கு முன்னேற்றம்

சவுதி அரேபியாவில் ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் எலைட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சவுதிஅரேபியாவின் அல்நாசர் அணி சார்பில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்று விளையாடி வருகிறார். ஈரான் எஸ்டெக்லால் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார். மேலும் அந்த அணியில் ஜான் டுரானும் கோல் அடித்தார்.

இதனால் ஈரான் எஸ்டெக்லால் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் எலைட் பகுதியின் காலிறுதிக்கு ரொனால்டோ விளையாடிய அல்நாசர் அணி முன்னேறியது. 2022 டிசம்பரில் ரியாத் கிளப்பில் கையெழுத்திட்டதில் இருந்து இன்னும் அல்-நாசர் அணிக்காக கோப்பையை வென்று கொடுக்க ரொனால்டோவால் முடியவில்லை என்ற குறை உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top