varun chakravarthy

சாம்பியன் டிராபியில் அசத்திய வருண் சக்ரவர்த்தி சினிமா ரியல் ஹீரோ

ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் அசத்தியவர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி. அவரது சுழல் ஜாலத்திற்கு முன்னணி அணிகளின் வீரர்கள் கூட தடுமாறினார்கள். இளம் வயதில் இருந்தே வருண் சக்ரவர்த்தி கிரிக்கெட் வீரரா என்றால் இல்லை.

varun chakravarthy in champion trophy

கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் உடையவர் தான் என்றாலும், வழக்கமான தமிழ்நாடு இளைஞர் போல் எஸ்ஆர்எம் பல்கலையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்று, கட்டுமான பணி தொடர்பாக பணிபுரிந்தார். எதுவும் சரியில்லாததால் 2014ல் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை ஸ்ரீதிவ்யா நடித்த ஜீவா படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்தார். அந்த படம் கிரிக்கெட் வீரரின் போராட்ட வாழ்வு பற்றிய படம். 2023 ஜூன் மாதம் பிரபல தனியார் டிவி நிகழ்ச்சியான குக் விக் கோமாளியில் பங்கேற்றார். தற்போது 33 வயதாகும் வருண் சக்ரவர்த்தி, 26 வயதில் தான் தொழில்முறை கிரிக்கெட் ஆடத்தொடங்கினார்.

அவரது பயணம் ஒரு பந்துவீச்சாளராக இல்லாமல் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக இருந்தது. க்ரோம்பெஸ்ட் கிரிக்கெட் கிளப்பில் அவர் சில நேரம் வேகபந்து வீச்சாளராக திகழ்ந்தார். ஆனால் முழங்கால் காயம் அவரை ஒரு சுழற்பந்து வீச்சாளராக மாற்றியது. வருண் சக்ரவர்த்தியின் கிரிக்கெட் வாழ்வின் திருப்பு முனையாக 2017-2018 சீசனில் ஜூபிலி கிரிக்கெட் கிளப்பிற்காக ஒரு நாள் போட்டியில் 7 ஆட்டங்களில் 31 விக்கெட்டுகளை எடுத்தது தான்.

அதை தொடர்ந்து 2018 தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் அவரது செயல்பாடுகள் ஐபிஎல் உரிமையாளர்களின் கவனத்தை ஈர்த்தது . அதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தார். அதன் பின் எல்லாமே அவருக்கு முன்னேற்றம் தான். இன்று சாம்பியன் டிராபி கோப்பை இந்தியா வெல்வதற்கு காரணமாக அமைந்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top