இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி டென்மார்க்கின் டேனியல் லுண்ட்கார்ட் மற்றும் மேட்ஸ் வெஸ்டர்கார்ட் ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

நேற்று நடந்த இந்த ஆட்டம் 40 நிமிடம் நீடித்தது. இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-17, 21-15 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றனர். இன்று நடக்கும் ஆட்டத்தில் இருவரும், உலக தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஹாவ் நான் ஜீ மற்றும் வெய் ஹன் ஜெங்கை எதிர்கொள்கிறார்கள்.

இந்திய வீரர்கள் பங்கேற்கும் மற்ற ஆட்டங்களில், லக்ஷ்யா சென் இந்தோனேசியாவின் ஜொனாடன் கிறிஸ்டியை எதிர்கொள்கிறார். அதே நேரத்தில் மாளவிகா பன்சோட் ஜப்பானின் மூன்றாம் நிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியை எதிர்கொள்கிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top