ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘பி’ பிரிவில் முனனாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் ஓமன், அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ஜிம்பாப்வே அணி குறித்த ஒரு பார்வை…
ஜிம்பாப்வே அணி கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அணி உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளது.
கேப்டன் சிக்கந்தர் ராசா, விக்கெட் கீப்பர் பிரெண்டன் டெய்லர் போன்ற பல பரிச்சயமான முகங்கள் அணியில் இருந்தாலும், ஜிம்பாப்வே அணி ஆப்பிரிக்கத் தகுதிச்சுற்றில் வெற்றி பெறுவதில் 22 வயதான பிரையன் பென்னட்டே முக்கியப் பங்கு வகித்திருந்தார். தகுதி சுற்றில் அவர், ஒரு சதம், 3 அரை சதங்கள் விளாசியிருந்தார்.
மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் கலந்துகொண்ட முத்தரப்பு டி 20 தொடரிலும் சிறந்த செயல் திறனை பிரையன் பென்னட் வெளிப்படுத்தியிருந்தார். இதனால் அவர், மீது எதிர்பார்ப்பு உள்ளது. 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்கடித்த ஜிம்பாப்வே அணி இம்முறை தொடக்க ஆட்டத்தில் ஓமன் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்தக்கூடும்.
அணி விவரம்:
சிக்கந்தர் ராசா (கேட்ச்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேம் க்ரீமர், பிராட்லி எவன்ஸ், கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, ப்ளெஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, பிரெண்டன் டெய்லர்.
மோதல் விவரம்:


