utt

யுடிடி சீசன் 6-ல் பங்கேற்கும் அணிகள் எவை?

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) சீசன் 6 போட்டிகள் இன்று (மே 31) அகமதாபாத்தில் உள்ள EKA அரங்கில் பிரம்மாண்டமாக தொடங்கிறது. தொடக்க நாளில் 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணி, அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸை எதிர்கொள்கிறது.

 முன்னதாக மாலை 5 மணி அளவில் நடைபெறும் ஆட்டத்தில் சீசன் 2 வெற்றியாளரான தபாங் டெல்லி டிடிசி, ஸ்ரீஜா அகுலா தலைமையிலான ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியை தொடக்க ஆட்டத்தில் சந்திக்கிறது. இந்த சீசனில் 8 அணிகள் 23 டைகளில் போட்டியிட உள்ளன.

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் பங்கேற்கும் அணிகள் விவரம்:

அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ்: அய்ஹிகா முகர்ஜி, ரிக்கார்டோ வால்தர் (ஜெர்மனி), சினேஹித் சுரவஜ்ஜுலா, ஜியோர்ஜியா பிக்கோலின் (இத்தாலி), திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவா, யாஷினி சிவசங்கர்

ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ்: ஃபேன் சிகி (சீனா), கிரில் ஜெராசிமென்கோ (கஜகஸ்தான்), பயாஸ் ஜெயின், சுதன்ஷு குரோவர், பொய்மண்டி பைஸ்யா, நிகத் பானு.

தபாங் டெல்லி டிடிசி: தியா சித்தலே, மரியா சியாவோ (ஸ்பெயின்), சத்தியன் ஞானசேகரன், க்யூக் இசாக் (சிங்கப்பூர்), சுஹானா சைனி, சவுரவ் சாஹா.

டெம்போ கோவா சேலஞ்சர்ஸ்: ஜெங் ஜியான் (சிங்கப்பூர்), ஹர்மீத் தேசாய், தியாகோ அப்பலோனியா (போர்ச்சுகல்), ரோனித் பஞ்சா, கிருத்விகா சின்ஹா ராய், சயாலி வானி.

ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்: பிரிட் ஈர்லாண்ட் (நெதர்லாந்து), கனக் ஜா (அமெரிக்கா), ஸ்ரீஜா அகுலா, ஜீத் சந்திரா, பிரிதா வர்த்திகர், யஷான்ஷ் மாலிக்.

கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ்: அட்ரியானா டயஸ் (புயிர்ட்டோ ரிக்கோ), அருணா குவாட்ரி (நைஜீரியா), அங்கூர் பட்டாசார்ஜி, செலினா செல்வகுமார், அனன்யா சண்டே, தீபித் பாட்டீல்.

பிபிஜி புனே ஜாகுவார்ஸ்: அல்வாரோ ரோபிள்ஸ் (ஸ்பெயின்), டினா மெஷ்ரெப் (எகிப்து), தனீஷா கோடேச்சா, அனிர்பன் கோஷ், ரீத் ரிஷ்யா, முடித் டானி.

யு மும்பா டிடி: பெர்னாடெட் சாக்ஸ் (ருமேனியா), லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), யஷஸ்வினி கோர்படே, ஸ்வஸ்திகா கோஷ், ஆகாஷ் பால், அபிநந்த் பிபி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top