இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான விருப்பத்தை விராட் கோலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) தெரிவித்திருந்த நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பு வந்துள்ளது.
இது தொடர்பாக விராட் கோலி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “14 ஆண்டுகளுக்கு முன்னர் நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினேன். டெஸ்ட் கிரிக்கெட் பயணம் என்னை இவ்வளவுதூரம் கூட்டிச் செல்லும் என்று நான் நினைத்ததில்லை. அது என்னை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, என்னை செதுக்கி, எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது. அந்தப் பாடங்களை நான் வாழ்நாள் முழுவதும் கொண்டு செல்வேன்.

வெள்ளை நிற உடையில் விளையாடுவது எப்போதும், ஆழமான உணர்வை தரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது என்பது எளிதானது அல்ல. ஆனால், இந்தக் கடினமான முடிவை நான் சரியான நேரத்தில் எடுத்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நான் என்னால் இயன்றதை எல்லாம் கொடுத்துள்ளேன். பதிலுக்கு அது எனக்கு நான் எதிர்பார்க்காததை எல்லாம் தந்தது.
இன்று நன்றி நிறைந்த இதயத்துடன் விடைபெறுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், எனது சகாக்களுக்கும், என்னை ஆளாக்கியவர்களுக்கும் நன்றி. என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை எப்போதும் புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி 14 ஆண்டுகால தனது புகழ்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 123 போட்டிகளில் விளையாடி 46.85 சராசரியுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார். 30 சதங்கள், 31 அரை சதங்கள் விளாசியுள்ளார்.
கடைசியாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் பெர்த் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசியிருந்தார். 2019-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புனேவில் நடைபெற்ற டெஸ்டில் 254 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். கடைசி 2 வருடங்களாக அவரது சராசரி 32-ஐ தாண்டவில்லை.

விராட் கோலி 68 டெஸ்ட் போட்டிகளுக்க கேப்டனாக இருந்துள்ளார். இதில் இந்தியா 40 வெற்றி, 17 தோல்விகளை பதிவு செய்திருந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார் விராட் கோலி.
இதற்கு முன்னர் எம்.எஸ்.தோனி 60 போட்டிகளில் கேப்டனாக இருந்து 27 வெற்றிகளையும், சவுரவ் கங்குலி 49 போட்டிகளில் கேப்டனாக இருந்து 21 வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்திருந்தனர்.

உலக டெஸ்ட் அரங்கில் அதிக வெற்றிகளை தேடிக்கொடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 4-வது இடம் பிடித்திருந்தார். இந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித் (109 போட்டிகள், 53 வெற்றிகள்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (77 போட்டிகள், 48 வெற்றிகள்), ஸ்டீவ் வாஹ் (57 போட்டிகள், 41 வெற்றிகள்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.


Rokubet Casino’s been my new jam. rokubetcasino.net, in case you’re wondering. Loads of games, and pretty smooth navigation. Give it a go! rokubetcasino
Heard good things about the Rokubet affiliate program. Supposedly decent rates. Checking out rokubetaffiliate to see if it’s worth the hustle! rokubetaffiliate
Hey guys, just popping in to say I’ve been checking out Casinomhub142. Pretty decent selection of games, and the interface is easy to navigate. Worth a look if you’re looking for a new spot to try. Check it out here: casinomhub142