தொடக்க நாளில் கோவா – அகமதாபாத், டெல்லி – ஜெய்ப்பூர் அணிகள் மோதுகின்றன
அகமதாபாத்
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) சீசன் 6 போட்டிகள் வரும் மே 31 அன்று அகமதாபாத்தில் உள்ள EKA அரங்கில் பிரம்மாண்டமாக தொடங்கிறது. தொடக்க நாளில் 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணி, அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸை எதிர்கொள்கிறது.
முன்னதாக மாலை 5 மணி அளவில் நடைபெறும் ஆட்டத்தில் சீசன் 2 வெற்றியாளரான தபாங் டெல்லி டிடிசி, ஸ்ரீஜா அகுலா தலைமையிலான ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியை தொடக்க ஆட்டத்தில் சந்திக்கிறது. இது ஒரு உயர் அழுத்த சீசனுக்கான தொனியை அமைக்கிறது. இந்த சீசனில் 8 அணிகள் 23 டைகளில் போட்டியிட உள்ளன.
உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பெர்னாடெட் சோக்ஸ் மற்றும் வளர்ந்து வரும் இந்திய நட்சத்திரம் யஷஸ்வினி கோர்படே ஆகியோரை உள்ளடக்கிய யு மும்பா டிடி, ஜூன் 1-ம் தேதி ஸ்பானிஷ் ஜாம்பவான் அல்வாரோ ரோபிள்ஸ் தலைமையிலான பிபிஜி புனே ஜாகுவார்ஸுக்கு எதிராக தங்கள் சீசனைத் தொடங்குகிறது.
உலக இளையோர் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அங்கூர் பட்டாச்சார்ஜி மற்றும் ஒலிம்பியன்கள் குவாட்ரி அருணா, அட்ரியானா டயஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ள அறிமுக அணியான கொல்கத்தா தண்டர்பிளேட்ஸ் வரும் ஜூன் 2-ம் தேதி, சீசன் 3 வெற்றியாளரான சென்னை லயன்ஸ் அணிக்கு எதிராக தங்கள் சீசனை தொடங்குகிறது. இந்த ஆண்டு ஏலத்தில் மிகவும் அதிக விலைக்கு வாங்கப்பட்டிருந்த சீனாவின் ஃபேன் சிகி, யு-17 பிரிவில் முன்னாள் உலக நம்பர் 1 வீரரான பயாஸ் ஜெயின் ஆகியோர் சென்னை லயன்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளனர்.
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (TTFI) ஆதரவுடன் நிரஜ் பஜாஜ், விட்டா டானி ஆகியோரால் நடத்தப்படும் இந்தியன் ஆயில் யுடிடி தொடரானது டேபிள் டென்னிஸில் மிகவும் விரும்பப்படும் உலகளாவிய விளையாட்டு சொத்துக்களில் ஒன்றாக விரைவாக மாறியுள்ளது. லீக்கின் வளர்ந்து வரும் அந்தஸ்து விரிவான ஒளிபரப்பால் பொருந்துகிறது, இந்த சீசனில் அனைத்து போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேல் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் நேரடியாக ஒளிபரப்பப்படும், மேலும் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.

2024-ம் ஆண்டில் இந்தியன் ஆயில் யுடிடி 20 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது. இது முந்தைய சீசனை விட 1.3 மடங்கு அதிகம். டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் மற்றும் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் இடையேயான தொடக்க ஆட்டம் 1.33 மில்லியன் ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதே நேரத்தில் யு மும்பா டிடி – அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸ் டெர்பி போட்டியை தொலைக்காட்சியில் 1.83 மில்லியன் ரசிகர்கள் கண்டுகளித்தனர். அந்த சீசன் முழுவதும், ஒவ்வொரு ஆட்டமும் சராசரியாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருந்தது.
ஜூன் 2-ம் தேதி மும்பை மற்றும் அகமதாபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் உட்பட முக்கிய மோதல்கள் வரிசையாக நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு தபாங் டெல்லி மற்றும் டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தன. இதன் மறு போட்டியாக தற்போது இரு அணிகளும் ஜூன் 4-ம் தேதி மோதுகின்றன.
டெல்லி அணியில் சத்தியன் ஞானசேகரன் மற்றும் தியா சித்தலேவும், கோவா அணியில் ஹர்மீத் தேசாய் மற்றும் சிங்கப்பூரின் ஜெங் ஜியானும் களமிறங்குகின்றனர். அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
ஒவ்வொரு அணியும் குரூப் ஸ்டேஜில் ஐந்து டைகளில் விளையாடும். ஒவ்வொரு டையும் 5 ஆட்டங்களைக் கொண்டிருக்கும். ஒரு டையில் 2 ஆண்கள் ஒற்றையர், இரண்டு பெண்கள் ஒற்றையர் மற்றும் ஒரு கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் இடம்பெறும். லீக் கட்டத்திற்குப் பிறகு, புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குக்கு முன்னேறும், முதல் அரையிறுதியில் லீக் சுற்றில் முதலிடத்தை பிடிக்கும் அணி, 4-வது இடத்தை பிடிக்கும் அணியுடன் மோதும்.
இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் லீக் சுற்றில் 3-வது இடத்தை பிடிக்கும் அணியும், 4-வது இடத்தை பிடிக்கும் அணியும் பலப்பரீட்சை நடத்தும். அரை இறுதி ஆட்டங்கள் இரவு 7:30 மணிக்கு நடைபெறும். ஒரே நாளில் இரண்டு ஆட்டங்கள் ஏழு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் போட்டி மாலை 5 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7:30 மணிக்கும் தொடங்கும்.