tilak

டி 20 தரவரிசையில் திலக் வர்மா 3-வது இடம்

 துபாய்

 சர்வதேச டி 20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் திலக் வர்மா 804 ரேட்டிங் புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 2-வது இடத்தில் உள்ளார்.

 ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார். இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு இடத்தை இழந்து 6-வது இடத்தை பிடித்துள்ளார். மற்ற எந்த இந்திய பேட்ஸ்மேன்கள் டாப் 10-ல் இடம் பெறவில்லை.

 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி 706 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கும், ரவி பிஷ்னோய் 674 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கும், இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப்

சிங் 653 புள்ளிகளுடன் 10-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர். இங்கிலாந்தின் ஆதில் ரஷித் 710 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அவர், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் 4 விக்கெட்கள் கைப்பற்றியிருந்தார். நியூஸிலாந்தின் ஜேக்கப் டஃபி 723 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 252 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top