Harmeet Desai

யுடிடி சீசன் 6: கோவா சேலஞ்சர்ஸ் வெற்றி

பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியை 10-5 என்ற கணக்கில் வீழ்த்தியது

இந்தியன் ஆயில் யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் உள்ள EKA Arena அரங்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சேலஞ்சர்ஸ், பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியுடன் மோதியது.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஹர்மீத் தேசாய், பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் அல்வாரோ ரோபிள்ஸுடன் (ஸ்பெயின்) மோதினார். இதில் ஹர்மீத் தேசாய் 2–1 (11–10, 11–9, 10–11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் கிருத்விகா சின்ஹா ராய், பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் ஸியோன் லீயுடன் (கொரியா) மோதினார். இதில் கிருத்விகா சின்ஹா ராய் 2–1 (11–5, 5–11, 6–11) என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். இதன் மூலம் இந்த டையில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி 4–2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஜெங் ஜியான் (சிங்கப்பூர்), ஹர்மீத் தேசாய் ஜோடியானது, பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் ஸியோன் லீ, அனிர்பன் கோஷ் ஜோடியுடன் மோதியது. இதில் ஜெங் ஜியான்-ஹர்மீத் தேசாய் ஜோடி 3-0 (11-9, 11-5, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதனால் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி 7-2 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை எட்டியது. 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றைய் ஆட்டத்தில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் தியாகோ அப்பலோனியா (போர்ச்சுகல்), பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் இளம் இந்திய நட்சத்திரமான அனிர்பன் கோஷுடன் மோதினார். இதில் அனிர்பன் கோஷ் 2-1 (11-9, 8-11, 11-7) என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார்.

எனினும் இந்த மோதலை டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி 8-4 என தன்வசப்படுத்தியது. கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஜெங் ஜியான், பிபிஜி புனே ஜாகுவார்ஸ் அணியின் ரீத் ரிஷ்யாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் ஜெங் ஜியான் 2-1 (10-11, 11-7, 11-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முடிவில் இந்த டையில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி 10-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6-ல் நாளை (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் – அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் யு மும்பா டிடி – ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (TTFI) ஆதரவுடன் நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரால் நடத்தப்படும் இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6, ஒரு முதன்மையான தொழில்முறை லீக்காக தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 16 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் இடம் பெறும் 23 மோதல்களும் அகமதாபாத்தின் EKA Arena அரங்கில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் BookMyShow-ல் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top