டாம்பியர் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் அரை இறுதியில் தோல்வி அடைந்தார்.
பின்லாந்தின் டாம்பியர் நகரில் டாம்பியர் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் தரவரிசையில் 306-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 249-ம் நிலை வீரரான பிரான்ஸின் சாஷா குய்மார்ட் வெயன்பர்க்குடன் மோதினார். இதில் சுமித் நாகல் 5-7, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.