சென்னை
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் ஆடவருக்கான ஆல் இந்தியா இன்விடேஷனல் வாலிபால் போட்டி கடந்த மே 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில் சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.
எஸ்ஆர்எம் அணி முதல் லீக் ஆட்டத்தில் 25-23, 25-09, 25-07 என்ற செட் கணக்கில் திருவனந்தபுரம் சாய் அணியை தோற்கடித்தது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் ஆந்திர மாநிலம் பல்நாடு கிளப்பை 25-21, 25-19, 23-25, 25-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
எஸ்ஆர்எம் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை ஐஓபி அணியை 26-24, 25-17, 32-34, 25-20 என்ற செட் கணக்கில் வென்றது. சிறந்த அட்டாக்கராக தருண், பிளாக்கராக சயந்த், லிபரோவா தங்கபாலு (எஸ்ஆர்எம்) ஆகியோரும் சிறந்த வீரராக ஸ்ரீநாத்தும் தேர்வானார்கள்.