IMG 20260123 WA0033

முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நேற்று (22-ம் தேதி) நடைபெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குசால் மெண்டிஸ் 117 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் விளாசினா. ஜனித் லினயாக 46, கமில் மிஷாரா 27, துனித் வெல்லாலகே 25, பதும் நிஷங்கா 21 ரன்கள சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷீத் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

272 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 76 பந்துகளில, ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 62 ரன்களும், ஜோ ரூட் 90 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் ஹாரி புரூக் 19, ஸாக் கிராவ்லி 6, ஜேக்கப் பெத்தேல் 15, ஜாஸ் பட்லர் 19, சேம் கரண் 5, ரேஹான் அகமது 27, ஜேமி ஓவர்டன் 34, லியாம் டாவ்சன் 2 ரன்ளில் நடையை கட்டினர்.

இலங்கை அணி சார்பில் பிரமோத் மதுஷன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். துனித் வெல்லாலகே, ஜெப்ஃரே வாண்டர்சே ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக துனித் வெல்லாலகே தேர்வானார்.

19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி நாளை (24-ம் தேதி) பிற்கபல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top