ஸ்டட்கார்ட்
யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து அரை இறுதி ஆட்டத்தில் நேற்று ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் ஸ்பெயின் – பிரான்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஸ்பெயின் அணி தரப்பில் லாமின் யாமல் இரு கோல்கள் (54 மற்றும் 67-வது நிமிடங்கள்) அடித்தார். நிக்கோ வில்லியம்ஸ் (22-வது நிமிடம்), மைக்கேல் மெரினோ (25-வது நிமிடம்), பெட்ரி (65-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
பிரான்ஸ் அணி சார்பில் கிளியன் பாப்பே (59-வது நிமிடம்), ராயன் செர்கி (79-வது நிமிடம்), ரன்டால் கோலா முவானி (90+3′-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஸ்பெயின் அணியின் தானி விவியன் 84-வது நிமிடத்தில் சுயகோல் அடித்திருந்தார். வரும் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி போர்ச்சுகலுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. போர்ச்சுகல் அணி அரை இறுதி சுற்றில் ஜெர்மனியை தோற்கடித்து இருந்தது.