ponmati

யூரோ கால்பந்து பைனலில் ஸ்பெயின்

மகளிர் யூரோ கால்பந்து தொடரின் பைனலுக்கு ஸ்பெயின் அணி முன்னேறியது.

மகளிருக்கான யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதியில் நேற்று ஜெர்மனி – ஸ்பெயின் அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் 113-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் அய்டானா பொன்மட்டி கோல் அடித்து அசத்தினார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது ஸ்பெயின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top