ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இரு முறை சாம்பியன்களான மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்துடன் இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் ஸ்காட்லாந்து அணி குறித்த ஒரு பார்வை…
ஸ்காட்லாந்து அணி 7-வது முறையாக டி 20 உலகக் கோப்பையில் களமிறங்க உள்ளது. இம்முறை வங்கதேச அணி கடைசி நேரத்தில் நீக்கப்பட்டதால் அந்த அணிக்கு பதிலாக ஸ்காட்லாந்து அதிர்ஷ்டவசமாக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. அதேபோன்று இம்முறை அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் கவனம் செலுத்தக்கூடும்.
ஸ்காட்லாந்தின் வெற்றி வாய்ப்புகள், முக்கிய வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பொறுத்தே அமையும், அவர்களில் பிரண்டன் மெக்முல்லனும் ஒருவர். 26 வயதான அவர், சர்வதேச டி 20-ல் 7 அரை சதங்கள் அடித்துள்ளார். அவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவையாகும். இதில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஒரு பரபரப்பான தோல்வியின் போது அவர், அடித்த சிறப்பான 60 ரன்களும் அடங்கும்.
கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். சர்வதேச டி 20-ல் அவர், சதமும் விளாசி உள்ளார். 89 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சுழற்பந்து வீச்சாளரனா மார்க் வாட் எதிரணிகளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
அணி விவரம்:
ரிச்சி பெரிங்டன் (கேப்டன்), டாம் புரூஸ், மேத்யூ கிராஸ், பிராட்லி கியூரி, ஆலிவர் டேவிட்சன், கிறிஸ் கிரீவ்ஸ், ஜைனுல்லா இஹ்சான், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், ஃபின்லே மெக்ரீத், பிராண்டன் மெக்முல்லன், ஜார்ஜ் முன்சி, சஃப்யான் ஷெரீஃப், மார்க் வாட், பிராட்லி வீல்.
மோதல் விவரம்:


