siraj

முகமது சிராஜுக்கு வைர மோதிரம் வழங்கிய ரோஹித் சர்மா !

ஐசிசி டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய முகமது சிராஜுக்கு பிசிசிஐ சார்பில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா வைர மோதிரத்தை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது.

இதைத்தொடர்ந்து இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்ததற்காக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உட்பட இந்திய வீரர்கள் அனைவருக்கும் பிசிசிஐ சார்பில் வைர மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது.

பரிசளிப்பு நிகழ்வின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத், மும்பை அணிகள் மோத உள்ளன.

இதற்காக நேற்று இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மும்பை ரோஹித் சர்மா, முகமது சிராஜை சந்தித்து பிசிசிஐ தரப்பில் வைர மோதிரம் வழங்கி கவுரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top