Rohit 4

ரோஹித் சர்மா 12 ஆயிரம் ரன்கள் வேட்டை !

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டிராவிஸ் ஹெட்0, அபிஷேக் சர்மா 8, இஷான் கிஷன் 1, நித்திஷ் குமார் ரெட்டி 2 ரன்களில் நடையை கட்டினர்.

35 ரன்களுக்கு 5 விக்கெட்களை பறிகொடுத்த நிலையில் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்களும் அபினவ் மனோகர் 37 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 43 ரன்களும் விளாசியதன் காரணமாகவே ஹைதராபாத் அணியால் கவுரவமான ஸ்கோரை எடுக்க முடிந்தது.

மும்பை அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 ஓவர்களை வீசி 26 ரன்களை வழங்கி 4 விக்கெட்களை வீழ்த்தினார். தீபக் சாஹர் 2 விக்கெட்கள் கைப்பற்றினார். ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 144 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மும்பை அணி 15.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க வீரரான ரோஹித் சர்மா 46 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சேர்த்தார். ரியான் ரிக்கெல்டல் 11, வில் ஜேக்ஸ் 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி +0.673 நிகர ரன்ரேட்டுன் 10 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 12 ரன்களை எடுத்திருந்த போது அனைத்து வகையிலான டி 20 போட்டிகளிலும் 12 ஆயிரம் ரன்களை எட்டி சாதனை சாதனை படைத்தார். இந்த சாதனையை ரோஹித் சர்மா 456 போட்டிகளில் நிகழ்த்தியுள்ளார். டி 20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை எட்டும் 8-வது வீரர் ரோஹித் சர்மா ஆவார். இந்திய வீரர்களில் விராட் கோலிக்கு பின்னர் இந்த சாதனையை அவர், நிகழ்த்தியுள்ளார். ரோஹித் சர்மா இதுவரை 12,058 ரன்கள் குவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் 12000 ரன்களுக்கு மேல் குவித்தவர்கள்

கிறிஸ் கெய்ல் – 14,562 ரன்கள் (463 போட்டிகள்)

அலெக்ஸ் ஹேல்ஸ் – 13,610 ரன்கள் (494 போட்டிகள்)

சோயிப் மாலிக் – 13,571 ரன்கள் (557 போட்டிகள்)

கீரன் பொல்லார்ட் – 13,537 ரன்கள் (695 போட்டிகள்)

விராட் கோலி – 13,208 ரன்கள் (407 போட்டிகள்)

டேவிட் வார்னர் – 13,019 ரன்கள் (404 போட்டிகள்)

ஜோஸ் பட்லர் – 12,469 ரன்கள் (442 போட்டிகள்)

ரோஹித் சர்மா – 12,058 ரன்கள் (456 போட்டிகள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top