ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. 20 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் விளையாடாத பாகிஸ்தான் அணி தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக சல்மான் அலி அஹா நியமிக்கப்பட்டுளளார். முன்னனி வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவுஃபுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ம் தேதி நெதர்லாந்துடன் மோதுகிறது. முக்கியமான ஆட்டத்தில் 15-ம் தேதி இந்தியாவை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் அணிவிவரம்: சல்மான் அலி அஹா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபஹீம் அஸ்ரஃப், ஃபகர் ஸமான், கவாஜா முகமது நஃபி, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்ஸா, நஸீம் ஷா, ஷஹிப்ஸதா ஃபர்ஹான், சைம் ஆயுப், ஷாஷீன் ஷா அஃப்ரிடி, ஷதாப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.

